About Management
Founder
"Fortune Favours The Brave"
Shri.K.Rangaswamy Naidu, Founder of this renowned institution was the son of Thiru. Kondama Naidu. He was known as Bangala Naidu. The life of Shri.K.Rangaswamy Naidu was known for his achievements and accomplishments.
He was a guiding spirit to so many people in and around Perianaickenpalayam. During 1940’s he was a building contractor in Coimbatore Jilla. He was given the responsibility of laying the roads from Coimbatore to Mettupalayam by the British. Despite laying roads, he planted tamarind trees from Narasimmanaicken palayam to Mettupalayam. He laid the foundation for keeping the surroundings clean and neat with planting of saplings.
Message from President
பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ. கே. அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியை 50 ஆண்டுகளாக தொடர்ந்து கல்விப்பணியை ஆற்றி, இன்று "பொன்விழா" கொண்டாடும் இத்தருணத்தில் என்னுடைய நினைவுகள் 1960 ம் ஆண்டு எனது தகப்பனார் திரு.ரங்கசாமி நாயுடு இந்தப் பள்ளி துவங்குவதற்கான காரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகள் முடிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சுற்றி சுமார் 20 கி.மீ. சுற்றளவில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு என்று எந்த விதமான பள்ளியும் இல்லாமல் இருந்தது. நமது மறைந்த பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்கள் விரும்பியதுபோல், குழந்தைகள் நடந்து சென்று படிக்கும் தூரத்தில் பள்ளிக்கூடங்கள் அமைய வேண்டும் என்ற எண்ணத்தை எங்கள் தகப்பனார் பூர்த்தி செய்தார். அதன் தொடர்ச்சியாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெண் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று இப்பள்ளி அன்றைய முதல்வர் மாண்புமிகு திரு.பக்தவச்சலம் அவர்களுடைய ஆசியுடன் துவக்கப்பட்டது.
அவர்கண்ட கனவு, இன்று நிறைவேறி இப்பள்ளியில் படித்த கிராமத்துப் பெண்கள் மிக உயர்ந்த பதவிகளிலும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், மருத்துவர்களாகவும், இருப்பதை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கின்றது. இந்த பள்ளி ஐம்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படக் காரணமாக இருந்த, பள்ளிக்குழு தலைவர்களாக இருந்து செயலாற்றிய எனது மூத்த சகோதரர்கள் திரு. R. நாராயணசாமி நாயுடு, திரு. R. தாமோதரசாமி நாயுடு, திரு. R. ராமகிருஷ்ண நாயுடு அவர்களுடைய பாராட்டுக்கள். மறைந்த என்னுடைய மூத்த சகோதரர்கள் திரு. R. ராஜேந்திரன், திரு. R. பாலசுந்தரம் அவர்களையும் இந்த நன்னாளில் நினைவு கூறுகிறேன். மேலும், இந்த உயர்வுக்கு காரணமாக இருந்த இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுதல்கள். இப்பள்ளி கோவை மாவட்டத்தில் முதன்மையான பள்ளியாக செயல்பட எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கும் செயலர் அவர்களுக்கும், தலைமையாசிரியை அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் என் மனமார்த்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அன்புத்தாயார் , திருமதி. R. கிருஷ்ணம்மாள் அவர்கள் எனது தந்தைக்கு உறுதுணையாக இருந்து பள்ளியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார் என்பதை இத்தருணத்தில் நினைவு கூற விளைகிறேன்.
Message from Secretary
Our School is nestled in a serene environment. Next to home the school plays a very responsible and prime role in forming a good society.
Our aim is to inculcate good discipline, individuality and mould the children to face the future challenges in life, by keeping the social, moral and cultural values intact. We provide platform to develop awareness towards nature and conservation. Our school is updated with all modern amenities and we have efficient faculty. We make sure that our students feel comfortable in all possible ways including the campus.
We are glad that our school has completed 53 years successfully with the support of Management, faculty members, students and parents.
“To acquire knowledge is to achieve excellence is our motto”. We will continue to strive to do our best to provide quality education to all our students, especially those from economically weaker section of the society.
Message from Headmistress
"அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவினும்
புண்ணியங்கோடி யாதெனில்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
என்ற பாரதியின் வாக்கிற்கினங்க அனைத்து மாணவர்களும் எளிதாகச் சென்று படிக்கும் தூரத்தில் கல்விக்கூடம் அமைய வேண்டும், என்ற எமது நிறுவனரின் கனவுதான் இன்று இருபாலரும் பசிக்கும் தன்னிகரற்ற கல்வி நிறுவனமாக எமது பள்ளி சீரிய முறையில் செயல்பட்டு வருவது பெருமைக்குரியதாகும்.
மனித சமுதாயத்தின் அடிப்படை நலங்களான அன்பு, அறிவு, சேவை இவற்றையே இலக்குகளாகக் கொண்டு, எளிய மாணவர்களுக்கும் ஏற்றமிகு எதிர்காலத்தை உறுதியாக வழங்கும் பெருமைமிகு கல்வி நிறுவனமாக எமது பள்ளி திகழ்ந்து வருவது வியக்கத்தக்கதாகும்.
“Education is the most powerful weapon to Success”.
என்பதற்கிணங்க மாணவர்களுக்கு கல்விச் சேவை மட்டுமல்லாது, அவர்களை பன்முகத் திறன் உடையவர்களாக திகழச் செய்ய பாட்டு, விளையாட்டு, உடற்பயிற்சி, படைப்புத் திறன் பயிற்சிகள், ஆங்கிலப் பயிற்சி, தற்காப்புக் கலை பயிற்சி ஆகியவை சிறப்புடன் அளிக்கப்பட்டு மாணவர்கள் ஆளுமை மிக்கவர்களாக, சமுதாயத்தின் சவால்களை எதிர்நோக்கும் வல்லமை உடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நூலகங்கள், ஆக்கத்துடன் ஊக்கமாய் கல்வி கற்க ஸ்மார்ட் வகுப்பறைகள், நாட்டுப்பற்று மற்றும் சேவை மனப்பான்மையுடன் திகழ தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவை சங்க இயக்கம், சுற்றுச்சூழல் மன்றம், சீரிய மாண்போடும், பணிவோடும் திகழ, அறநெறி வகுப்புகள் என மாணவர்கள் பல்வேறு பயிற்சிகளால் பட்டை தீட்டிய வைரங்களாய் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளைப் பெற்று தங்கள் வாழ்வில் வெற்றி நடை போட பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் முயற்சியையே சுவாசமாய்க் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் எம் மாணவர்கள், வள்ளல்களின் வழித் தோன்றலாய் உற்ற காலத்தே உதவிக் கரம் நீட்டி எம்மை ஊக்கப்படுத்தும் உன்னத மாண்புடைய எமது நிர்வாகத்தினர் என எமது பள்ளியின் வெற்றிப் படிகட்டுகள் உன்னத்தின் உச்சிக்கு உயர்த்திட வழிவகுக்கின்றது.